மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இந்து சமூகத்தினருக்கும், நாகா, கூகி மற்றும் மைதேயி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள், கடைகள், தேவாலயங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பலவும் தீக்கு இரையாக்கப்பட்டன. இதையடுத்து மணிப்பூரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
காலையிலேயே ஆந்திராவில் இருந்து வந்த இடி மழை மேகக்கூட்டங்கள்… வெதர்மேன் சொன்ன சில் தகவல்!
இதையடுத்து வன்முறை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வன்முறை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணையதள சேவையை முடக்கி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை முடக்கம் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறையில் 7 வயது மகனுடன் தாய் மற்றும் அவரது உறவினர் என 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இம்பாலின் புறநகர்ப் பகுதியில் 2,000 பேர் கொண்ட மைதேயி சமூக கும்பல் ஆம்புலன்ஸை காவல்துறையின் முன் எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகக் கடுமையான புயலாக உள்ளது பிபோர்ஜாய்… வேகமாக தீவிரமடைகிறது.. தனியார் ஆய்வாளர்கள் தகவல்!
அசாம் ரைபிள்ஸ் முகாமில் கலவரக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் டோன்சிங் ஹாங்சிங் என்ற 7 வயது சிறுவன், அவனது தாய் மீனா ஹாங்சிங், அவருடடைய உறவினர் லிடியா லூரெம்பாம் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மைதேயி கிறிஸ்தவர்கள் ஆவர். காயமடைந்த அவர்கள் 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸை வழிமறித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைதேயி சமூகத்தினர் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்தினர். இதில் ஆம்புலன்ஸில் இருந்த 7 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இதில் 3 பேரின் உடல்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானதாகவும் எலும்புகள் மட்டுமே மிஞ்சியதாகவும் கொல்லப்பட்ட 3 பேரின் உறவினர்களான பாலோன்லால் ஹாங்சிங் தெரிவித்தார். மேலும் மைதேயி சமூகத்தினரால் தாங்கள் பல கொடுமைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பஸ்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணி போற நபரா நீங்க? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு… இன்று முதல்!