நீலகிரி மலை ரயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பயணம்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் நடந்த, துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த, 3ம் தேதி இரவு ஆளுநர் ரவி, உதகை வந்தார். 5 ம் தேதி துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பின், உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி மனைவி லக்ஷ்மியுடன் ராஜ்பவன் வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்நிலையில், இன்று ( ஜூன் 7 ) ஆளுநர் ரவி மனைவி லக்ஷ்மியுடன் உதகை ரயில் நிலையத்திலிருந்து மலை ரயில் மூலம், குன்னூர் சென்றார். உதகை – குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம் குகை உள்ளிட்டவற்றை கடந்து ரயில் சென்றதை பார்த்து பரவசமடைந்தார்.

ரயில் குன்னூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. குன்னூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட ஆளுநர் குன்னூரில் இருந்து கார் மூலம் உதகை ராஜ்பவன் வந்தார். முன்னதாக, உதகை ரயில் நிலையம் வந்த ஆளுநர் ரவியை ரயில்வே உதவி இயக்குநர் சரவணன் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

ஆளுநர் மலை ரயிலில் செல்வதையொட்டி மோப்ப நாய் மூலம் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்களை சோதனையிட்டு, பின், ரயிலில் செல்லும் சுற்றுலா பயணிகளை சோதனைக்கு பின் அனுமதித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.