உக்ரைனின் அணையில் உடைப்பு – பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு

கீவ்,

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 469 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணை உள்ளது. இந்த அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உடைப்பு ஏற்பட்ட அணை ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷியா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் உள்ள அணை தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணையை தகர்த்தது யார்? அல்லது அணையில் நீர்மட்டம் அதிகரிப்பால் உடைப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.