சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கவுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தியேட்டரில் வெளியான கஸ்டடி படம் முதல் நாளே காத்து வாங்கிய நிலையில், சில நாட்களிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சமந்தாவின் எக்ஸ் கணவர் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகி ஹிட் அடித்து விடலாம் என வெங்கட் பிரபுவை டிக் செய்த நிலையில், நாக சைதன்யாவுக்கு பட்டை நாமத்தை போட்டு விட்டார் நம்ம மாநாடு இயக்குநர்.
மங்காத்தாவுக்கு பிறகு மாநாடு: சென்னை 28 படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இயக்குநராக மாறிய வெங்கட் பிரபு கோவா, சரோஜா என படு ஜாலியான படங்களை இயக்கி வந்தார்.
திடீரென அஜித்தை வைத்து மங்காத்தா எனும் பிளாக்பஸ்டர் படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், அப்படியொரு ஹிட் படத்தை கொடுத்தார்.
அதன் பின்னர், பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி என தம்பி கார்த்தியையும் அண்ணன் சூர்யாவையும் எழுந்திரிக்கவே முடியாத அளவுக்கு தரமான சம்பவத்தை செய்து கிடைத்த அற்புதமான வாய்ப்பை சொதப்பி விட்டார்.
கடைசியாகத்தான் வந்தார் விநாயக் மகாதேவ் போல வெங்கட் பிரபுவை நம்பி சிம்பு படம் கொடுக்க அவருக்கு மாநாடு எனும் ரிப்பீட் மோட் ஹிட் படத்தைக் கொடுத்து கம்பேக் கொடுத்தார் வெங்கட் பிரபு.
நாக சைதன்யாவுக்கு நாமம்: மங்காத்தா படத்திற்கு பிறகு சூர்யா, கார்த்தி எப்படி நம்பிப் போய் வெங்கட் பிரபுவிடம் சிக்கிக் கொண்டார்களோ, அதே போல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வான்டட்டாக வந்து வெங்கட் பிரபுவின் கஸ்டடியில் சிக்கி சின்னா பின்னாமாகி விட்டார்.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் நம்பி நடிக்க முடிவெடுத்துள்ளார். அஜித், சிம்புவுக்கு செய்தது போல பிளாக்பஸ்டர் படத்தை விஜய்க்கும் வெங்கட் பிரபு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஸ்டடி ஓடிடி ரிலீஸ் தேதி: கஸ்டடி திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், அந்த படத்தின் மேக்கிங் பாராட்டுக்களை பெற்றுள்ளது. நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, சரத்குமார், பிரியாமணி, அரவிந்த் சாமி மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கஸ்டடி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 9ம் தேதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான சமந்தாவின் சாகுந்தலம் படம் ஓடிடி ரிலீசுக்கு பிறகும் ட்ரோல் செய்யப்பட்டதை போல கஸ்டடி ட்ரோல் செய்யப்படுமா? அல்லது விஜய் ரசிகர்கள் ஓடிடியில் கஸ்டடியை போட்டுப் பார்த்து ஹிட் கொடுப்பார்களா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்!
Embark on an electrifying journey alongside Constable Siva as he fearlessly navigates a treacherous maze of corruption, deceit, and lies!#CustodyOnPrime, June 9 pic.twitter.com/HyRyGoWUXP
— venkat prabhu (@vp_offl) June 7, 2023