பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே வழியாக வந்த பெங்களூரு யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது […]