கனவு பலிச்சிடுச்சு… இப்படித் தான் மகாராஷ்டிர மக்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏன் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் கூட, வெங்கட்ரமனா கோவிந்தா… கோவிந்தா… இந்த நாள் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது எங்களின் நீண்ட நாள் கனவு. நேவி மும்பையில் ஏழுமலையான் கால் பதிக்கப் போகிறார் என்பது பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
நேவி மும்பையில் ஏழுமலையான்திருமலையில் எப்படி பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறதோ, அதேபோல் அற்புதமாக ஒரு கோயில் நேவி மும்பையில் உயர்ந்து நிற்கும். இதன்மூலம் ஏழுமலையானை எங்கள் சொந்த மண்ணிலேயே தரிசிக்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவு பலிக்கப் போகிறது என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், நேவி மும்பையில் ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வர் கோயிலை கட்டி எழுப்ப மாநில அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும்.உல்வே பகுதியில் பிரம்மாண்ட கோயில்இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இனி விஷயத்திற்கு வருவோம். மகாராஷ்டிர மாநிலம் நேவி மும்பையில் உள்ள உல்வே பகுதியில் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் தேதி அறிவிப்பு… அடுத்த பிரம்மாண்டம் இங்க தானாம்… என்னென்ன சிறப்புகள்?பூமி பூஜை கோலாகலம்இதையடுத்து அங்கு பிரம்மாண்ட ஏழுமலையான் கோயிலை கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கான வேலைகளில் தேவஸ்தான பொறியாளர்கள் குழு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதியே பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 7) மிகவும் சிறப்பான முறையில் பூமி பூஜை நடந்து கொண்டிருக்கிறது.சிறப்பான ஏற்பாடுகள்இதில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர மாநில அரசு அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, வாரிய உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஜெகன் மோகன் தான் காரணம்பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசிய தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இந்த சிறப்புமிக்க தருணத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் அவர் தான் மகாராஷ்டிர மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தர பெரிதும் ஊக்கப்படுத்தினார். தற்போது கோயிலுக்கான செயல் திட்டங்கள் தயாராக இருக்கின்றன.
திருமலை போன்ற வசதிகள்ரேமெண்ட் குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரீ கவுதம் ஹரி சிங்கானியா 75 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்க தயாராக இருக்கிறார். நேவி மும்பையில் ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி புஷ்கரினி, அலங்கார மண்டபம், ரத்னா மண்டபம், வாகன மண்டபம், நான்கு மாட வீதிகள் என திருமலையில் உள்ள முக்கியமான அம்சங்கள் அனைத்தும் இடம்பெறவுள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்தார்.