உலகின் மிகப் பழைமையான புதைகுழி கண்டெடுப்பு | Hypersonic ஏவுகணையை உருவாக்கிய இரான் – உலகச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவால் இரண்டு ஆண்டுகளில் பல மனிதர்கள் உயிரிழக்கக்கூடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனகின் ஆலோசகர் மட் க்லிப்போர்ட் எச்சரித்திருக்கிறார்.

உக்ரைனின் ககோவ்கா அணை மீதான தாக்குதலால் டினிப்ரோ ஆற்றில் 150 டன் எஞ்சின் எண்ணெய் கசிந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

உலகின் மிகப் பழமையான கி.மு 200,000-க்கு முந்தைய புதைகுழி, ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மாஸ்கோவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உளவு பார்த்த, முன்னாள் FBI உளவு அதிகாரியான ராபர்ட் ஹாண்சன், தன்னுடைய 79 வயதில் கொலராடோ உள்ள சிறையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக இரான் தெரிவித்திருக்கிறது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் கரோலினா மூச்சோவாவை (Karolina Muchova) எதிர்கொள்கிறார் அரியனா சபலென்க்கா (Aryna Sabalenka).

பிரிட்டனில் சீன தூதரகத்தின் கீழ் செயல்படும் அதிகாரபூர்வமற்ற காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்தாட் (Tom Tugendhat) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

துருக்கி அதிபர் தேர்தலில் வென்று, மூன்றாவது முறையாக அந்த நாட்டின் அதிபராகப் பதவியேற்றார் எர்டோகன். இந்த நிலையில், துருக்கி அதிபர் போஸ்டருக்கு `ஹிட்லர் மீசை’ வரைந்த 16 வயது சிறுவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களின் ஆரம்ப சோதனைகளை இஸ்ரேல் நடத்தத் தொடங்கியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.