அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்து கலக்கியிருந்தார் ஜெயம் ரவி. இவரின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க பலரும் விரும்பினர். இதற்கான முயற்சிகளும் துவங்கப்பட்ட நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பலர் கண்ட கனவை நனவாக்கினார் மணிரத்னம். அவரது இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக உருவானது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக இந்தப்படத்தை தயாரித்தன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும் நடித்திருந்தனர். இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இறைவன்’. இந்தப்படத்தை அஹமத் இயக்கியுள்ளார். இவர் என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியவர். இவரின் புதிய படைப்பாக உருவாகியுள்ள இறைவனில் ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
Thalapathy 68: ‘தளபதி 68’ பட ஹீரோயின் யார் தெரியுமா.?: தெரிஞ்சா அசந்துடுவீங்க..!
‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘இறைவன்’ படம் அஹமத் பாணியில் வித்தியாசமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் படமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ தவிர சமீபகாலமாக ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்து வெளியான எந்த படங்களும் போதுமான வரவேற்பை பெறாததால் ‘இறைவன்’ படம் ஜெயம் ரவிக்கு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில் வளாகத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குனர்: வைரலாகும் வீடியோ.!