மும்பை: மும்பையை சேர்ந்த மனோஜ் சஹானி (56) என்பவருடன் 36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்ளாமல் கணவன் – மனைவியாக ‘லிவிங் டுகெதராக’ வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், சரஸ்வதியை அடித்து கொன்றுள்ளார்.
கொலையை மறைக்க இந்த 56 வயது சைகோ காதலன், சரஸ்வதியின் உடலை, மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மனோஜை கைது செய்ததுடன் வீட்டினுள் சோதனையிட்டதில் கொலையை மறைக்க சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement