சேர்ந்து வாழ்ந்த பெண்ணை 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் வேகவைத்த கொடுமை

மும்பை

மராட்டிய மாநிலம் மீரா ரோடு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோஜ் சஹானி (52) இவர் சரஸ்வதி வைத்யான் என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமால் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இந்த வீட்டில் இருந்து இருந்து துர்நாற்றம் வீசுவதாக கட்டிடத்தில் வசிப்பவர்கள் நயநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு ஒரு பெண் கொலை செய்யபட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் கொலை மற்றும் உடல் வட்டப்பட்டாதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், “மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு சொசைட்டியில் இருந்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இங்கு ஒரு ஜோடி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தது. முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஷ்ரத்தா கொலை போலவே இந்த பெண்ணை கொலை செய்து உடல் துண்டுகளை அப்புறப்படுத்த நினைத்ததாகக் கூறுகின்றனர். உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு ஒரு கட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரை குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர். செய்யப்பட்டுள்ளார். ஷ்ரத்தா வால்கர் வழக்கைப் பற்றி நிறைய படித்திருப்பதாகவும், உடலை அப்படியே அப்புறப்படுத்த விரும்பியதாகவும் அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.