`எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
கெளதம் மேனனின் நடிகைகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். மேகாவுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதை தொடர்ந்து ரஜினியின் ‘பேட்ட’ சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் நடித்தார்.
இந்நிலையில் மேகா ஆகாஷூக்கு திருமணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து மேகா ஆகாஷின் அம்மாவிடம் பேசினோம். “ட்விட்டர்ல யாரோ மேகாவுக்குக் கல்யாணம்னு யாரோ எழுதி இருக்காங்க. அந்தப் பதிவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மேகாவுக்குக் கல்யாணம்னா அதை நாங்களே முறைப்படி அறிவிப்போம். மேகா நடிச்ச படங்களோட ரிலீஸ் அப்போ கூட இத்தனை பேர் கால் பண்ணிப் பேசினதில்ல. மேகாவுக்கு கல்யாணமான்னு நிறைய போன் கால்ஸ் வருது. ஆனா, இது தவறான செய்தி.” என மேகா ஆகாஷின் அம்மா தெரிவித்தார்.