Rajinikanth: ஜப்பானில் நடந்த ஆச்சரிய சம்பவம்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஜப்பானில் நடந்த அதிசயம் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்னா கெத்து தான் என்கிறார்கள் தலைவர் ரசிகர்கள்.

​ஜப்பான்​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஜப்பான் மக்கள் ரஜினியின் படங்களை விரும்பி பார்க்கிறார்கள். ரஜினிக்காக சில ரசிகர்கள் ஜப்பானில் இருந்து சென்னை வந்தது எல்லாம் நடந்திருக்கிறது. ஜப்பானுக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அப்படி ஒரு உறவு. அதை யாராலும் பிரிக்க முடியாது. இந்நிலையில் தான் ஜப்பாவில் அந்த அதிசய சம்பவம் நடந்திருக்கிறது.சுனைனா​”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!​​உழைப்பாளி​ஜப்பானில் இருக்கும் சாலை ஒன்றில் ரஜினியின் உழைப்பாளி படத்தில் வந்த பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளிகளின் போராட்டத்தின்போது அந்த பாடலை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். ரஜினியின் தமிழ் பாடல் ஜப்பானில் ஒலித்தது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ஆனால் ரஜினி ரசிகர்கள் அதிகம் இருக்கும் ஜப்பானில் இப்படி நடந்ததில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்களுக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என அழகாக சொல்லும் ரசிகர்கள் இருக்கும் நாடாச்சே ஜப்பான்.
​முத்து​ரஜினிகாந்த், மீனா நடிப்பில் வெளியான முத்து படம் ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முத்து படம் ஜப்பானில் ரூ. 26 கோடி வசூல் செய்தது. ஜப்பான் பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த இந்திய படமாக இருந்தது முத்து. அந்த சாதனையை அண்மையில் ஆர்ஆர்ஆர் படம் முறியடித்தது. இருப்பினும் ஜப்பானில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமை முத்துக்கு தான் இருக்கிறது.
​லால் சலாம்​ரஜினிகாந்த் தற்போது தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்து வருகிறார். முதலில் மும்பையில் ரஜினியை வைத்து சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார் ஐஸ்வர்யா. அடுத்ததாக புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினி வந்ததை அறிந்த புதுச்சேரி மக்கள் ஷூட்டிங்ஸ்பாட்டில் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

​பயணம்​Rajinikanth: நண்பன் உயிருடன் இல்லை: அம்பரீஷ் மகன் திருமணத்தில் முதல் ஆளாக பங்கேற்ற ரஜினிரஜினிகாந்த் புதுச்சேரியில் இருக்கும் வீடியோ வெளியான வேகத்தில் அவர் பெங்களூரில் இருக்கும் வீடியோ வெளியானது. தன் நண்பர் அம்பரீஷின் மகன் அபிஷேக்கின் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இந்த வயதிலும் ஒரே வாரத்தில் மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூர் என்று பயணம் செய்திருக்கிறாரே. தலைவர் போன்று யாரு மச்சான் என்கிறார்கள் ரசிகர்கள்.

​ஐஸ்வர்யா​Rajinikanth: இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லப்பா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்7 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது. தன் கம்பேக் படத்திலேயே அப்பாவை நடிக்க வைப்பதை ஆசிர்வாதமாக பார்க்கிறார் ஐஸ்வர்யா. அப்பாவை வைத்து படம் எடுப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என இன்ஸ்டாகிராமில் அவர் உருக்கமாக போஸ்ட் போட்டிருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஃபீல் செய்துவிட்டார்கள்.

​தலைவர் 170​லால் சலாமை அடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்திலும் அவர் இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் கதாபாத்திரமாம் ரஜினிக்கு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்கிறார் ஞானவேல். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.