`சம்பளம் கேட்டதுக்கு விக்னேஷ் சாதியைச் சொல்லித் திட்டினாரு'- வைரல் ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?

நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான விக்னேஷ், தன்னிடம் சம்பளம் கேட்ட பட்டியலின இளைஞரை சாதி ரீதியாகவும் ஆபாசமாகவும் இழிவுபடுத்தியாக, சமூக வலைதளங்களில் ஆடியோ பரவி திரைத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

இதுபற்றிப் இளைஞர் சுபாஷைத் தொடர்புகொண்டு பேசியபோது, “என்னுடைய சொந்த ஊர் மதுரை. சென்னைக்கு வேலை தேடி வந்து சீனியர் நடிகர்களுக்கு டச்-அப் பாய் அசிஸ்டென்ட்டாக வேலை பார்க்கிறேன். புது சீரியலுக்காக விக்னேஷ் சார்க்கிட்ட வேலைக்குப் போனேன். இரண்டு நாட்கள் ஷூட்டிங். முதல் நாள் சம்பளம் 700 ரூபாய் கொடுத்துட்டாரு. ரெண்டாவது நாள் பாதிநாள்தான் ஷூட்டிங். ஒருநாள் ஷூட்டிங்னாலும் அரைநாள் ஷூட்டிங்னாலும் எங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கணும். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். அன்னைக்கு, எனக்கு 100 ரூபாய் கையில கொடுத்துட்டு மீதி ஜி-பே பன்றேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்புறம், ’சந்திரமுகி-2’ படத்துக்காக ஐந்து நாள்கள் ஷூட்டிங் கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா, பாதி பாதி சம்பளமாதான் போட்டுவிட்டாரு. மீதி சம்பளத்தை கொடுக்கிறேன்னு சொன்னவர் கொடுக்கல. படத்தோட மேனேஜர்கிட்ட கேளுன்னாரு. அவர்க்கிட்ட போயி கேட்டா, விக்னேஷ்கிட்ட கொடுத்துட்டேன்னு சொன்னார். தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கான சம்பளத்தை எப்போதும் எங்கக்கிட்ட நேரடியா கொடுக்கமாட்டாங்க.

நடிகர்கள்கிட்டத்தான் கொடுப்பாங்க. இவருக்கு போன் பண்ணி சம்பளம் கேட்டேன். திரும்பவும் அதே பதிலைத்தான் சொன்னாரு. சரிங்க சார், சீரியலுக்கு போன அன்னைக்கு பேலன்ஸ் இருந்ததே அதையாவது கொடுங்க சார்ன்னு சொன்னேன். அப்போதான் வாக்குவாதமாகி அசிங்கமா சாதிவெறியோடு என்னை இழிவுபடுத்துற பேசினார். என் அம்மாவை இழுத்து அசிங்கமா பேசினது மட்டுமில்லாம சாதி ரீதியாவும் இழிவுப்படுத்தி ஆவேசமா பேசினார். அதுக்கப்புறம், வெறும் 250 ரூபாய்தான் போட்டுவிட்டார். அப்போக்கூட முழு சம்பளத்தைக் கொடுக்கல. எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுடுச்சு.

வன்னி அரசு.

என்னோட அப்பா ஊர்ல கூலி வேலைதான் பார்க்குறாரு. வேலை ரெகுலரா இருக்காது. நான் வேலைக்கு போயிதான் வீட்டுக்கு பணம் அனுப்புறேன். சென்னையில ரூம் வாடகை, ஷூட்டிங் நடக்காத நேரங்களில் சாப்பாடுன்னு செலவெல்லாம் எந்தளவுக்கு இருக்கும்னு உங்களுக்கே தெரியும். அதுலயும் வயித்துல அடிக்கிறமாதிரி நடந்துக்கிட்டா எப்படி? ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் அரை நாள் ஷூட்டிங் என்றாலும் எங்களுக்கான முழுநாள் சம்பளத்தை படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் கொடுத்துவிடுவார். அவர்களிடம் வாங்கிய அந்த சம்பளத்தைக்கூட எங்களுக்கு கொடுக்காமல் ஆயிரக்கணக்கில் சம்பளம் இந்த நடிகர் இப்படி ஏமாற்றலாமா?” என்று வேதனையுடன் கேள்வியெழுப்புகிறார்.

விக்னேஷ் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் கேட்டபோது, “நடிகர் விக்னேஷ் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவில் இருக்கிறார். நடிகராகவும் உள்ளார். அவரை நிறைய பேர் ஃபாலோ செய்பவர்கள் இருப்பார்கள். வேலை செய்த கூலியை அவ்வளவு மரியாதையாக அந்தத் தம்பி கேட்கிறார். அவரை சாதியைச் சொல்லி விக்னேஷ் திட்டுகிறார் என்றால், அவரோட மனநிலை எப்படி இருக்கு? அண்ணாமலை இப்படிப்பட்ட சாதியவாதிகளை வெச்சுக்கிட்டு கலாச்சார பிரிவை இப்படித்தான் வளர்க்கப்போகிறாரா? அவருடைய கவனத்துக்கும் கொண்டுபோயிருக்கேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திரைத்துறையில் இருப்பதால் நடிகர்கள் இவரை கண்டிக்கவேண்டும். நடிகர் சங்கம் உள்ளிட்ட வேறு சங்கத்தில் இருந்தாலும் விக்னேஷை உடனடியாக நீக்கவேண்டும். இதுதொடர்பாக, வி.சி.க சார்பாக காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

விக்னேஷ்

இதுகுறித்து விக்னேஷைத் தொடர்புகொண்டு நான் விளக்கம் கேட்டபோது, “அந்த ஆடியோவில் பேசுவது நான் அல்ல” என்று மறுத்தவர், “என்னுடைய சொந்த ஊர்ல ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள்ள விடமாட்றாங்கன்னு பதினஞ்சு வருஷமா கோயிலுக்குள்ளயே போகல. கொரோனா சூழலில் பலரும் கஷ்டப்பட்டப்போ எல்லாருக்கும் உதவி பண்ணினேன். கேமராமேன், வளர்ந்து வரும் உதவி இயக்குனர்களுக்கு எனது ஹோட்டலில் இலவசமா உணவு கொடுத்தேன்.

அதுவும், அந்த ஆடியோவுல நூறு, இருநூறு கொடுக்கலைன்னு பேசிக்கிறாங்க. எனக்கு வேற பையன் தான் அசிஸ்டென்ட்டா வந்துக்கிட்டிருந்தான். அவன் வரமுடியலைன்னுதான் இந்த பையனை அனுப்பி வெச்சான். அப்பவே சொன்னேன் புது பையன்லாம் செட்டாகாதுன்னு. ’கிராஜுவேட் முடிச்சிருக்கேன். ரூம் வாடகை கட்டமுடியல. அசிஸ்டென்ட் டைரக்டரா வரணும்’ன்னு சொன்னதாலதான் கூட்டிக்கிட்டு போனேன். ரெண்டுமணி நேரம்தான் ஷூட்டிங். நான் அப்படிப்பட்ட கேரக்டரே கிடையாது. மனசு நோகாம பார்த்துப்பேன். புடிக்கலைன்னா ஒதுங்கிப்போயிடுவேன். அப்படிப்பட்ட நான் எப்படி சாதி ரீதியா பேசுவேன்?” என்று மறுத்துப் பேசினார் விக்னேஷ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.