திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 32 கோடி ரூபாய் செலவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதே தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விமரிசையாக நடந்தது.
இதைத் தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.