சென்னை : நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த 6 காட்சிகளை படத்திலிருந்து படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.
கப்பல் என்ற காமெடி படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் தற்போது டக்கர் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் படமாக டக்கர் உருவாகியுள்ளது.
சித்தா படத்திற்கு வெள்ளோட்டம் கொடுத்த கமல் :நடிகர் சித்தார்த் பாய்ஸ் படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். சாக்லேட் பாயாக வலம்வந்த இவர், தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலும் நடித்து வருகிறார். சில காலங்கள் இவர் தமிழில் நடிப்பதை தவிர்த்துவந்த நிலையில், தற்போது ரீ என்ட்ரியாக தமிழில் நடிக்கத் துவங்கியுள்ளார் சித்தார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். பாய்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இவர் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் முக்கியமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டக்கர், டெஸ்ட் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இதில் டெஸ்ட் படத்தில் நயன்தாரா, மாதவன் மீரா ஜாஸ்மீன் போன்றவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சித்தார்த். மேலும் இவரது நடிப்பில் டக்கர் படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
கப்பல் என்ற காமெடி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் டக்கர் படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் காதலை மையமாக கொண்டு டக்கர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை 6 பாகங்களாக படக்குழுவினர் வெளியிட உள்ளனர். இது இந்திய அளவில் முதல் முயற்சி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் கவனத்தை பெற்றுள்ளது.
அடுத்ததாக சித்தா என்ற படத்திலும் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சித்தார்த் பேசியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தனது இடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சித்தார்த்தே தயாரித்துள்ளார். படத்திற்கு நிபு தாமஸ் இசையமைத்துள்ளார்.
நடிகர் சித்தார்த்துக்கும் அவரது அண்ணன் மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆப்பிரிக்காவில் நடந்த சூட்டிங்கின்போது சிறப்பான வெள்ளோட்டம் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக பேசிய கமல்ஹாசன், அந்த வீடியோவை தானே செட் செய்து, லொகேஷன், கேமரா செட்டிங் என அனைத்தையும் செய்ததாக சித்தார்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீடியோவில் சித்தா படத்திற்கு தான் வெள்ளோட்டம் கொடுத்துள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இடாகி தயாரித்துள்ள இந்தப் படம் மிகச்சிறந்த படைப்பாக அருண்குமாரால் இயக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா என்பதையும் கூறிய அவர், இந்தப் படம் நெஞ்சைத் தொடும் படமாக அமையும் என்றும், இந்தப் படம் எத்தகைய அனுபவத்தை கொடுத்தது என்பதை திரையில் பார்த்து தெரிந்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.