வால்வோ நிறுவனத்தின் துவக்கநிலை எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள EX30 எலக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் அதகபட்சமாக 474 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை வால்வோ வாங்குபவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இஎக்ஸ் 30 கார் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
Volvo EX30 Electric SUV
வால்வோ தாய் நிறுவனமான சீனாவின் Geely’s SEA பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள EX30 மாடலில் மூன்று பவர்டிரெய்ன் மற்றும் இரண்டு வெவ்வேறு பேட்டரி வகைகளுடன் வழங்கப்படும்.
விற்பனையில் உள்ள EX90 காரில் இருந்து EX30 வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. ‘தோர்ஸ் ஹேமர்’ எல்இடி ஹெட்லைட், சீல்-ஆஃப் முன்-முனை, ஏரோஸ்டைல் டூயல் டோன் அலாய் வீல் கொண்டுள்ளது.
இன்டிரியரில் வோல்வோவின் பாரம்பரிய வடிவமைப்பு வடிவத்தை கொண்ட டாஷ்போர்டில் 12.3-இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கூகுள் அடிப்படையிலான அமைப்பை பெற்றுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பெற்றுள்ளது. ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக, ஹோம் ஆடியோ-ஸ்டைல் சவுண்ட்பார் டாஷ்போர்டில் உள்ளது.
ஒற்றை மோட்டார் வேரியண்டிர் உள்ள 51kWh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் (LFP) பேட்டரியுடன் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 271hp பவர் கொண்டுள்ளது. இந்த மாடல் சிங்கிள் சார்ஜில் 342 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது.
அடுத்து, ஒற்றை மோட்டார் பெற்று 69kWh நிக்கல் மாங்கனீஸ் கோபால்ட் (NMC) பேட்டரியை கொண்டுள்ள வேரியண்ட், 6km/kWh என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்சு 474km ஆகும். இதே பேட்டரி பொருத்தப்பட்டு இருபக்கத்திலும் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட வேரியண்ட் அதிகபட்சமாக 427hp பவரை வழங்குகின்றது.
ஆரம்ப நிலை மாடல் DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 134 kW வரை ஏற்கும், அதே சமயம் ட்வின் மோட்டார் செயல்திறன் மாறுபாடு 153 kW வரை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். 69 kWh NMC பேட்டரியின் சார்ஜ் நேரம் 11 kW AC சார்ஜரை (0-100 சதவீதம்) பயன்படுத்தினால் 8 மணிநேரம் ஆகும், மேலும், 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜரில் (10-80 சதவீதம்) செருகினால் அரை மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும்.
அனைத்து Volvo EX30 பதிப்புகளுக்கும் அதிகபட்ச வேகம் 180km/hr ஆகும்.
வால்வோ EX30 இங்கிலாந்தில் இதன் விலை £33,795 (தோராயமாக ரூ. 35 லட்சம்) தொடங்குகிறது. இந்தியாவில் ஜூன் 14 ஆம் தேதி C40 Recharge எலக்ட்ரிக் காரை வால்வோ அறிமுகம் செய்ய உள்ளது.