ரோம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.