பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
அனஸி நகரில், சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட பள்ளி குழந்தைகள் பூங்காவில் விளையாடிய போது அவர்களை ஒருவன் கத்தியால் தாக்கத் தொடங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை உடனடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவன் சிரியாவிலிருந்து சட்ட விரோதமாக பிரான்ஸுக்கு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. படுகாயமடைந்த 6 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. அந்நபர் எதற்காக தாக்கினான் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.