இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். பல போராட்டங்களை கடந்து உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் விக்ரம். என்னதான் இவரின் படங்கள் சில தோல்வியடைந்தாலும் விக்ரமனின் நடிப்பில் எந்த குறையும் நம்பால் சொல்லமுடியாது. அந்த அளவிற்கு அவரின் நடிப்பால் நம்மை ஈர்ப்பார் விக்ரம்.
ஆனால் சமீபகாலமாக விக்ரமின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தன. எனவே ஒரு வெற்றிப்படத்திற்காக போராடி வந்த விக்ரமிற்கு எதிர்பார்த்த வெற்றியை பொன்னியின் செல்வன் திரைப்படம் தந்தது. என்னதான் அப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருந்தாலும் விக்ரமிற்கு தேவையான வெற்றியை தந்தது.
Leo: லியோ டீசரில் இடம்பெறும் கமல் ? அடேங்கப்பா..செம ட்விஸ்ட்டா இருக்கே..!
இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற விக்ரமின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில் தற்போது விக்ரம் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகின்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் திரைப்படம் விக்ரமிற்கு பிரம்மாண்டமான வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம்
குறிப்பாக இப்படத்திற்காக விக்ரம் தன்னை முற்றிலுமாக மாற்றியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியான நிலையில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார் விக்ரம். இந்நிலையில் விக்ரமிற்கு ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அந்த வாய்ப்பை விக்ரம் மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.
அதாவது கௌதம் மேனன் மேனன் இயக்கத்தில் விக்ரமனின் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக உருவாகிவரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் ஒருவழியாக வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் நிதி நெருக்கடியால் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
ஜூலை 14 வெளியீடு
இந்த சமயத்தில் தான் சமீபத்தில் துருவ நட்சத்திரம் படத்தை தயாரிப்பாளர் லலித் பார்த்ததாகவும், படம் அவருக்கு மிகவம் பிடித்துப்போக அவரே இப்படத்தை வெளியிடுவதாக கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது விஜய்யின் லியோ படத்தை தயாரித்து வரும் லலித் இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை சம்பாதித்துள்ளது.
Tamil அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தையும் லலித் வாங்கி வெளியிடுகிறார். இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஜூலை 14 ஆம் தேதி வெளியிட லலித் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகின்றது. விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.