மும்பை: டெல்லியில் ஷ்ரத்தா கொலையின் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் பல பெண்களின் உடல் துண்டுகள் ஃப்ரிட்ஜ்களுக்குள்ளும், குக்கர்களுக்கும் சிதைந்தும் வெந்தும் கொண்டிருக்கின்றன.. இந்த 2 நாட்களாகவே தானே சம்பவத்தின் அதிர்வலைகள் ஓயவில்லை.. சம்பந்தப்பட்ட நபரின் வாக்குமூலத்தை கேட்டு மும்பை போலீசார் மிரண்டு கிடக்கிறார்கள்.
மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ளது கீதாஆகாஷ் அப்பார்ட்மென்ட்.. அதன் 7வது மாடியில், லிவ் இன் முறையில் ஜோடி ஒன்று வசித்து வந்திருக்கிறார்கள்.. திடீரென அந்த வீட்டில் இருந்து மிகவும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
துண்டு துண்டாக: அதற்கு பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்தபோது, துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.
இதனை கண்டு மிரண்டு போன போலீசார், சடலத்தின் துண்டுகளை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. விசாரணையில் காதலர் மனோஜ் சானே என்பவர், பெண்ணை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்தது… அத்துடன், சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்டதும் தெரியவந்துள்ளது. இந்த ஜோடிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், வாக்குவாதம் முற்றி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது: இந்த சண்டை கொலைவரை சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் சொல்லும்போது: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சரஸ்வதிக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கொலை செய்துவிடுவேன் என்று சரஸ்வதியை மிரட்டினேன்.
அதற்கு பயந்த சரஸ்வதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. அந்த சடலத்தை பார்த்து நான் பயந்துவிட்டேன்… போலீசுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, உடலை மறைக்க படாத பாடு பட்டேன்.. பிறகு, மரம் அறுக்கும் மிஷினை வாங்கி உடலை துண்டு துண்டாக வெட்டினேன்.. உடல் மேல் பகுதியை முதலில் வெட்டி துண்டுகளாக்கிவிட்டேன்.. அதற்கு பிறகு, உடலை குக்கரில் வேக வைத்து எடுத்துச்சென்று நாய்களுக்கு இரையாக வீசினேன்” என்று வாக்குமூலத்தில் சொல்லியுள்ளார்.
குக்கர்: ஆனால், குக்கருக்குள் பெரும்பாலான உடற்பாகங்களையும் காணவில்லையாம்.. அதனால், சில பாகங்களை சாக்கடையில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். உடலின் மேல் பகுதியை முழுவதுமாக அப்புறப்படுத்திய நிலையில், கீழ் பகுதியை அப்புறப்படுத்துவதற்குள் பிடிபட்டு விட்டார். கீதா ஆகாஷ் என்ற இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு, இவர்கள் வந்து 3 ஆண்டுகளாகிறதாம்.. சம்பந்தப்பட்ட காதலர் மனோஜுக்கு 56 வயதாகிறது.. காதலியின் பெயர் சரஸ்வதி வைத்யா.. 32 வயதாகிறது..
ரேஷன் கடை: 15 வருடங்களுக்கு முன்பு போரிவலியில் ஒரு ரேஷன் கடையில் மனோஜ் வேலை பார்த்துள்ளார்.. அந்த ரேஷன் கடையில்தான் 2 பேரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்.. இருவருமே ஆதரவற்றவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும் தெரிகிறது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தபோதும், பார்த்ததுமே காதல் பற்றிக் கொண்டுவிட்டது. 2 பேருமே லிவிங் டூ கெதர் முறையில் வாழ துவங்கி உள்ளனர்.
கடந்த 2 நாட்களாகவே இவர்களது வீட்டில் இருந்து பிணவாடை வீசியிருக்கிறது.. இதைபற்றி மனோஜிடமே அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு மழுப்பலாக பதில் சொல்லி உள்ளார். ஆனாலும் பயந்து போன மனோஜ், ஒரு கருப்பு பையுடன் வெளியேறிவிட்டு, நள்ளிரவில்தான் வீடு திரும்பியிருக்கிறார்.. அந்த பெண்ணின் நடமாட்டம் இல்லாமல் மனோஜ் மட்டுமே தனியாக திரிந்துவந்ததால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் அடைந்து போலீசுக்கு சொல்லி உள்ளனர்.
முதலில் போலீஸ் வந்தபோது, அவர்களை உள்ளே விட மனோஜ் மறுத்துவிட்டாராம்.. பிறகு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், போலீசாருக்கே குமட்டிக்கொண்டு வந்ததாம்.. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவும், முதலில் பெட்ரூம் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு பிளாஸ்டிக் பை இருந்துள்ளது.. ரத்தக்கறை படிந்த ரம்பமும் இருந்துள்ளது. கிச்சனுக்கு போய் பார்த்தபோதுதான், தலையே சுற்றிவிட்டதாம்…
மனித சதைகள்: குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்ததுடன், சில பாத்திரங்களில் அந்த பெண்ணின் தலைமுடி கிடந்ததாம்.. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்.. முதலில், சுமார் 20 துண்டுகளாக வெட்டப்பட்டியிருககிறார்.. 13 துண்டுகள் மட்டுமே போலீசார் இப்போது கைப்பற்றி உள்ள நிலையில், மற்ற துண்டுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 4-ந் தேதியே இந்த கொலை நடந்து இருக்கலாம் என்கிறார்கள்.. 3 நாட்களாகவே மனித மாமிசத்தை அந்த பகுதியில் உள்ள நாய்கள் சாப்பிட்டு வந்துள்ளன.. இப்படித்தான், கடந்த வாரமும் ஒரு இளம்பெண்ணின் சடலம் சூட்கேஸில் துண்டுகளாக கிடந்தன.. கணவன்தான் கொலை செய்திருந்தார்.. இந்த மாதத்திலேயே இது 2 வது பயங்கரமாகும்.. மும்பை பகுதியில் பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது, அம்மாநில அரசுக்கு பெரும் சிக்கலை தந்துள்ளது..
சிக்கல்: போலீஸ் இலாகாவை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு தலைவலி கூடிவருகிறது.. தன்னுடைய துறையில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அபாய மணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே எம்பி வலியுறுத்தியிருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.