தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் தடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.தமிழகத்தில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள், தனி நபர்கள், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஓராண்டு சிறை தண்டனையோ அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் புதிதாக 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 8,195 இடங்கள் உருவாகும்.
விஜய் வந்தா… இந்த கட்சி ஓட்டு தான் காலியா?
சென்னையில் முதல்முறையாக நேற்று அதிகபட்சமாக 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2ஆம் தேதி அன்று 9.06 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டிருந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.நாகையில் காயாரோகண சாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 38 கோடி ரூபாய் மதிப்பிலான 1.63 லட்சம் சதுரடி நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலம் தனியார் பள்ளிக்கு வாடகை விடப்பட்டிருந்தது. சரியாக வாடகை செலுத்ததால் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 7 கோடியாக இருந்த பாதிப்பு, தற்போது 44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா? என்று சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3,734 வழக்குகளில் 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக 1996ஆம் ஆண்டு பெங்களூருவில் உலக அழகி போட்டி நடைபெற்றது.
உலகம்
கனடாவில் நடந்த ஊர்வலத்தில் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் வகையில் நடித்து காட்டியுள்ளனர். இது கனடாவிற்கு நல்லதல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.
வர்த்தகம்
சென்னையில் 384வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி திணறி வருகிறது. 151 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாற்றத்தில் உள்ளது.தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீசன் வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது. குறிப்பாக கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் ஆகியவை சேலத்திலும், குவாலிஃபயர் 2, இறுதிப் போட்டி திருநெல்வேலியிலும் நடக்கிறது.