Realme 11 Pro + இந்தியாவில் அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீயின் (Realme) மிகவும் அசத்தலான, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனான ரியல்மீ 11 ப்ரோ+ (Realme 11 Pro +) இந்தியாவில் அறிமுகம் ஆனது. நிறுவனம் அதன் Realme 11 தொடரின் டாப் எண்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தொலைபேசியில் 200MP கேமரா உள்ளது. இதை பற்றி ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.Realme 11 Pro+ இன் விலை மற்றும் அம்சங்களை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
Realme 11 Pro+: வடிவமைப்பு
Realme 11 Pro+ வடிவமைப்பு பிரமாண்டமானது. தொலைபேசியில் ஒரு பெரிய வட்ட கேமரா தொகுதி உள்ளது. பின்புறம் ஒரு ஃபாக்ஸ் லெதர் வடிவமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த விளிம்புகள் (கர்வ்ட் எட்ஜஸ்) இருக்கும். இது பிரபல ஆடம்பர பிராண்டான குஸ்ஸியின் முன்னாள் வடிவமைப்பாளரான மேட்டியோ மெனோட்டோவால் இணைந்து வடிவமைக்கப்பட்டது.
Realme 11 Pro+: டிஸ்ப்ளே
Realme 11 Pro+ ஸ்மார்ட்போன் முழு HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. திரையில் வளைந்த விளிம்புகள் மற்றும் திரையின் மேற்புறத்தில் சென்டர் பஞ்ச் ஹோல் செல்ஃபி கேமரா கட்அவுட் உள்ளது. இது 950 நிட்களின் உச்ச பிரகாசத்தை அதாவது ஹை ப்ரைட்னஸை வழங்குகிறது.
Realme 11 Pro+: விவரக்குறிப்புகள்
Realme 11 Pro+ மொபைல் போன் MediaTek Dimensity 7050 உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது Dimensity 1080 SoC இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த சிப்செட் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI 4.0 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. தொலைபேசியில் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டால்பி அட்மோஸ் ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் கை ரைஸ் ஆடியோ சர்டிஃபிகேஷன் ஆகியவை கிடைக்கும்.
Realme 11 Pro+: கேமரா
Realme 11 Pro+ இல் டிரிபிள் கேமரா அமைப்பு பின்புறத்தில் கிடைக்கிறது. ஃபோன் 200எம்பி முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில், முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
Realme 11 Pro+: இந்தியாவில் இதன் விலை என்ன?
Realme 11 Pro + ஆனது Astral Black, Sunrise Beige மற்றும் Oasis Green வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் இரண்டு சேமிப்பகத்திலும் (8GB + 256GB மற்றும் 12GB + 256GB) உள்ளமைவுகளில் கிடைக்கிறது. அடிப்படை மாடலின் விலை ரூ. 27,999 ஆகும். டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 29,999. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூன் 15, 2023 அன்று தொடங்கும். மேலும் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இது விற்பனைக்கு வரும்.