விவசாய நிலங்களை தகுதியற்றவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ததாகவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.லங்கா மீது குஜராத் போலீசார் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தனர். மேலோட்டமாக இது ஒரு சாதாரண நடவடிக்கையாக தோன்றினாலும் ஏப்ரல் 2018 மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில் காந்திநகர் கலெக்டராக இருந்த லங்கா விவசாய நிலத்தை வாங்குவதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘விவசாயி’ சான்றிதழ்களை தேவையான சரிபார்ப்பு இல்லாமல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கால்நடைகளுக்கான […]