Motorola Envision X: 30 ஆயிரத்தில் பிரீமியம் திரை, பிரீமியம் வசதிகளுடன் கலக்கல் ஸ்மார்ட் டிவி!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்திய ஸ்மார்ட் டிவி விற்பனையில் புதிதாக கலக்கல் வசதிகளுடன் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் திரை அளவில் Envision X என்ற டிவியை Motorola நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி Google TV OS மூலம் இயங்கக்கூடியது.

சமீபகாலமாக
ஸ்மார்ட்போன் விற்பனையில் கலக்கிவரும் மோட்டோரோலா
இப்போது ஸ்மார்ட் டிவி விற்பனையிலும் தடம் பதிக்க துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை புதுப்பிக்கவே இந்த புதிய Envision X அறிமுகம் செய்துள்ளதாக மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
​Motorola Envision X Specs (விவரம்)இதில் மிகவும் தரமான பிரீமியம் டிவிக்களில் இடம்பெறும் QLED திரை, Dolby Vision டெக்னாலஜி, 3D Surround Sound Technology என பல நவீன வசதிகள் உள்ளன.​பிரகாசமான டிஸ்பிளேபிரீமியம் திரை என்றால் என்ன என்று விளக்கம் தரும் அளவிற்கு 3840 x 2160 Pixel resolution கொண்ட Ultra HD 4K QLED டிஸ்பிளே இதில் இடம்பெறுகிறது. இதன் அதிகபட்ச பிரைட்னஸ் அளவாக 350 நிட்ஸ், 60HZ refresh rate, 178 டிகிரி வரை வீயூ ஆங்கிள் உள்ளது. இந்த டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு பெரிய திரை அளவுகளிலும் கிடைக்கிறது.அபாரமான சவுண்ட் டெக்னாலஜிஇந்த ஸ்மார்ட் டிவியில் இரண்டு 20W பாக்ஸ் ஸ்பீக்கர் வசதி வருகிறது. உடன் Dolby Atmos வசதியும் இருப்பதால் திரையரங்குகளில் படம் பார்ப்பது போன்ற அனுபவம் நமக்கு கிடைக்கும். இதில் Standard, Music, Sport, Movie என நான்கு விதமான சவுண்ட் மோட் வசதிகள் இடம்பெற்றுள்ளன.மற்ற சிறப்பம்சங்கள்கனெக்டிவிட்டி வசதிகளாக இதில் 3 HDMI போர்ட், இரண்டு USB போர்ட், Wi-Fi வசதி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி என அனைத்தும் உள்ளது. இந்த டிவி 1445mm அகலம், 837mm உயரம், 272mm தடிமன் அளவு உள்ளது.​விலை விவரம் (Motorola EnvisionX Price)இதன் 55 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி 30,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 65 இன்ச் மாடல் 39,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இது இந்த பட்ஜெட் ஸ்மார்ட் டிவி செக்மென்ட்டிலேயே கிடைக்கும் சிறந்த வேல்யூ ஸ்மார்ட் டிவி ஆகும். இதை நாம் Flipkart மூலம் இப்போதே வாங்கலாம்.அறிமுக சலுகையாக இதன் 55 இன்ச் டிவிக்கு 5 ஆயிரம் ரூபாய் சலுகையும், 65இன்ச் டிவிக்கு 10 ஆயிரம் ரூபாய் சலுகையும் கிடைக்கிறது. இதனால் இதன் விலையை மேலும் குறைத்து வாங்கலாம்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.