பெற்றோருக்கு தெரிஞ்ச ரகசியம்.. மறுநொடியே உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்.. நாமக்கல்லில் சோகம்

நாமக்கல்: நாமக்கல் அருகே ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றது குறித்து அந்நிறுவனத்தினர் பெற்றோருக்கு தெரிவித்ததால் ,கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

ஆன்லைன் செயலிகள் கடன் வலை விரித்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. புதிதாக வேலைக்கு செல்பவர்கள், இளைஞர்கள் தான் இவர்களின் முதல்குறியாக உள்ளது. இவர்களுக்கு பான் எண், ஆதார் எண்ணை வைத்து அதிக வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. கடனை திருப்பி கொடுக்காவிட்டால் அவர்களின் தொடர்பில் உள்ள முகவரிக்கு கடன் வாங்கிய தகவலை மெசேஜ் ஆக அனுப்பி அசிங்கப்படுத்தவும் செய்கின்றன.

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதை தடுக்க இந்த யுக்தியை அந்நிறுவனங்கள் பயன்படுத்துவதால், கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது.

அப்படித்ததான் நாமக்கல் அருகே பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய வாலிபர், பெற்றோருக்கு அந்நிறுவனம் தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நாமக்கல் அடுத்த செல்லப்பா காலனியைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவர், கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தார். இந்நிலையில், ஆன்லைனில் விளையாடுவதற்காக, ஆன்லைன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளாராம்.

கடன் தொகையை முறையாக செலுத்தாததால், சம்பந்தப்பட்ட நிறுவனம் லோகேஷ்வரனின் பெற்றோரிடம் பணத்தை செலுத்துமாறு துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த லோகேஷ்வரன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற ஆன்லைன் செயலி நிறுவனங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை மனநிலை வந்தால் உடனே அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து , அந்த எண்ணத்தில் இருந்து விடுபடலாம்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.