Apple VR கருவியை கலாய்த்து தள்ளிய எலன் மஸ்க்! 20 டாலர் காளான்களுக்கு நிகரா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகளவில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின்
Vision pro VR கருவி
பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் அதிகப்படியான விலை. இந்த கருவி 3,499 டாலர் விலைக்கு வெளியாகியுள்ளது.

Meta நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் சமீபத்தியில் இந்த விலைக்கு ஏற்ற வேல்யூ இந்த ஆப்பிள் கருவியில் இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் உலகம் முழுவதும் பலர் இந்த
ஆப்பிள் கருவியின் விலையை
வைத்து சமூகவலைத்தளத்தில் கேலி செய்து வருகிறர்கள். தற்போது இந்த கிண்டல் கேலியில் டெஸ்லா தலைவர் எலன் மஸ்க் சேர்ந்துவிட்டார். ஆப்பிள் கருவியை கிண்டல் செய்யும் விதமாக ஒரு மீம் சமூகவலைதளங்களில் உலாவுகிறது.

அதில் ஒரு வித போதை ஏற்படுத்தும் காளான்களை போன்றே வேற்றுகிரக வாசிகளுடன் இந்த Apple Vision Pro மூலம் உடனடியாக தொடர்பு கொள்ளமுடியும் என்றும். அந்த காளான் விலை 20 டாலர் ஆனால் ஆப்பிள் VR விலை 3,500 டாலர் என்று குறிப்பிட்ட மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ளது. இதற்கு கிழே பலர் கமெண்ட் செய்துவருகிறார்கள். இந்த காளான்கள் மூலம் நம்மால் பல கற்பனை உலகங்களுக்கு செல்லமுடியும். அதற்கு பதிலாக இவ்வளவு அதிக செலவு செய்து இந்த ஆப்பிள் கருவியை வாங்கவேண்டுமா? என்று கேள்வி எழுப்பி நக்கல் செய்கின்றனர்.

Apple Vision Pro வசதிகள்

இந்த VR கருவியில் ஆப்பிள் ஐபோன்களில் இருப்பது போன்ற Home View, Floating icons, Mail, Music, Safari போன்ற வசதிகள் உள்ளன. இதற்கு தனியாக கன்ட்ரோல் பட்டன் எதுவும் தேவையில்லை. இதன் உள்ளே Apple M2 Chip வசதி, கூடுதலாக R1 என்ற சிப் இடம்பெற்றுள்ளது. இதில் 12 கேமரா, 5 சென்சார், 6 மைக், Optic ID போன்ற வசதிகளும் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.