ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்!
பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் கிர்த்தி சனோன், சைப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் வெளிவந்த டிரைலர் மீண்டும் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இந்த படத்தை காண 10 ஆயிரம் டிக்கெட்டுகளை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் முன்பதிவு செய்துள்ளார் என்று அறிவித்துள்ளனர். இவருக்கு முன்னதாக தெலுங்கு தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், தெலங்கானாவில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இலவசமாக இந்த படத்தை காண 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.