இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தை பற்றி தான் தற்போது இந்திய திரையுலகமே பேசி வருகின்றது. அந்த அளவிற்கு இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடுமையான சூழலில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகின்றது. தற்போது பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
Vijay: விஜய்க்கு கோபம் வந்தா அவ்வளவுதான்..என்ன நடக்கும்னு தெரியாது..உண்மையை உடைத்த இயக்குனர்..!
கிட்டத்தட்ட 2000 நடனக்கலைஞர்களை கொண்டு இப்பாடல் உருவாகி வருவதாகவும், இப்பாடலை விஜய்யே பாடி இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. மேலும் இப்பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ள நிலையில் அன்றைய தினம் லியோ படத்திலிருந்து கண்டிப்பாக ஒரு அப்டேட் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாக படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் இதுவரை இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தில் பிரபல நாயகி மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான மடோனா தொடர்ந்து காதலும் கடந்து போகும், கவண் போன்ற படங்களில் நடித்தார்.
மடோனா செபாஸ்டியன்
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வரும் மடோனா செபாஸ்டியன் தற்போது லியோவில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இது உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை.
இந்நிலையில் இதுபோல லியோ படத்தை பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டால் மட்டுமே அத்தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவரும். இருப்பினும் இதுபோல வெளியாகும் தகவல்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.