சென்னை : சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பின் போது நடிகை ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் படாதபாடுப்படுத்தியதாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன், வில்லி, கதாநாயகி, குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் வெளுத்து வாங்கிவிடுவார்.
இவரைப்பார்த்து பல ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு வயசே ஆகாதா என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இளமையாக இருப்பார்.
நீலாம்பரி : 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பெயர் எடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஹீரோயினாக மட்டுமில்லை அம்மன் கதாபாத்திரம் என்றாலே கூப்புடு ரம்யா கிருஷ்ணனை என சொல்லும் அளவுக்கு இவரது முகத்தில் தெய்வீக கலை தாண்டவம் ஆடும். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து, படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
சிவகாமி தேவி : படையப்பா படத்தில் வில்லியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் ஜெய் மகிழ்மதி என ரம்யா கிருஷ்ணன் கர்ஜிக்கும் போது உண்மையில் உடம்பே சிலிர்த்துவிடும் அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் ரியலாக இருக்கும்.
பாதிலேயே ஓடிய நடிகை : இப்படி நடிப்புக்கு பெயர் போன ரம்யா கிருஷ்ணனை சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குநர் தியாகராஜன் படாதபாடுபடுத்தியதாக சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகை நடித்து வந்தார். ஆனால், கவர்ச்சியாக நடிக்க சொன்னதால், அந்த நடிகை பாதிலேயே ஓடி விட்டாராம்.
சமரசம் செய்த நடிகை : அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குனர் ரம்யா கிருஷ்ணனை கடுமையாக வேலை வாங்கி உள்ளார் எனவே இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பை விட்டு சென்றுவிடலாம் என முடிவெடுத்துள்ளார். அதன் பிறகு அங்கு இருந்த மிஸ்கின் அவருக்கு ஆறுதல் கூறி படத்தில் நடிக்க வைத்ததாக பேட்டியில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.