அமெரிக்காவை சேர்ந்த 33 வயது இளைஞர் பிரையன் சான்செஸ். இவர் ஏற்கனவே ஆறு அடி உயரம் இருந்தபோதிலும், தனது உயரத்தை அதிகரிக்க முடிவு செய்தார். ஆறு அடி உயரம் இருந்தபோதிலும், தனது உடலின் மேல் பகுதிக்கும் தனது கால்களுக்கும் வித்தியாசம் இருந்ததாக உணர்ந்துள்ளார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தனது கால் குட்டையாக இருப்பதாக ஃபீல் பண்ணிய பிரையன் சான்செஸ் கால்களின் உயர்த்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். சிறு வயதில் இருந்தே தனது கால்கள் உடலுக்கு ஏற்ற உயரத்தில் இல்லை என கூறி வந்த பிரையன் சான்செஸ், ஒரு முறை தனது மைத்துனருடன் ஒப்பிட்டு பார்த்துள்ளார்.
ஆசையை நிறைவேற்றாவிட்டால் ஆவியாக வருவேன்… மிரட்டிய மாமியார்… குஷ்பு செய்த காரியம்!
அப்போது மற்றவர்களை போல தனது கால்களின் உயரம் உடம்புக்கு ஏற்றது போல் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார் பிரையன் சான்செஸ். அதைப் பார்த்தவுடனே, ‘சரி, நான் இதைத்தான் செய்கிறேன் என்று நினைக்கிறேன்’ என்று நினைத்தேன்,” என்று அவர் மேலும் கூறினார். இதையடுத்து தனது உயரத்தை அதிகரித்தே ஆக வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார் பிரையன் சான்செஸ்.
இதற்காக துருக்கியில் உள்ள லைவ் லைஃப் டாலர் கிளினிக் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார் பிரையன் சான்செஸ். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சான்செஸுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவரது கால் முன்னெலும்பு மற்றும் ஃபைபுலா அகற்றப்பட்டு எலும்புகளுக்குள் ஒரு ராட் வைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்வி… படபடத்து போன உதயநிதி ஸ்டாலின்!
பின்னர், ஃபிக்ஸேட்டர்கள் மூலம் அந்த எலும்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை மூலம் காலின் மேல் பகுதியிலும் பிரையனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வெளிப்புறத்தில் இருந்த ஃபிக்ஸேட்டர்களின் போல்ட்டை தினமும் சுழற்றி வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சான்செஸ் தனது தொடை எலும்பின் நீளத்தை அதிகரிக்க இரண்டாவது அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு இந்தியா மதிப்பில் 57.5 லட்சம் ரூபாய். ஆனால் இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் விரைவாக குணமடைந்தார் பிரையன் சான்செஸ். இந்த அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு சான்செஸின் உயரம் மூன்றரை அங்குலங்கள் அதிகரித்தது.
திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இனி பிரச்சனையே இல்லை!
தனது உயரத்தை அதிகரிக்க ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார் பிரையன் சான்செஸ். ஆனால் தான் எதிர்பார்த்தப்படியே தனது உயரம் அதிகரித்ததால் தனக்கு எந்த வலியும் தெரியவில்லை, மகிழ்ச்சிதான் என கூறியுள்ளார் பிரையன் சான்செஸ். எடையை கூட்ட, குறைக்க லட்சக் கணக்கில் செலவு செய்யும் மக்கள் மத்தியில் உயரத்தை கூட்ட 33 வயது இளைஞர் 88 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது கேட்பவர்களை வியப்படைய செய்துள்ளது.