மும்பை: விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையின் உல்வேயில் புதிதாக, சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நான்கு கட்டங்களாக கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம், உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்கும், விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
1,160 ஹெக்டேரில் கட்டப்பட உள்ள இந்த விமான நிலையத்தின் முதல் இரண்டு கட்ட பணிகள் 2024 டிச., மாதம் நிறைவு பெறும்.
இந்த விமான நிலையத்தை அதானி நிர்வாகம் கையாள உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement