தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருபவர் பிரபு தேவா. அண்மையில் இவரது நடிப்பில் ‘பஹீரா’ படம் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிலும் தடம் பதித்தார். பிரபுதேவா முதலில் கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனை தொடர்ந்து ‘வில்லு’ படத்தின் போது இவரும், நயன்தாராவும் காதலித்தனர். ஆனாலும் இந்த காதல் கைகூடவில்லை. இந்நிலையில் கொரோனா சமயத்தில் பிரபுதேவாவுக்கு பிசியோதெரபிஸ்டான டாகடர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர்களின் நட்பு காதலாக மாறி பிரபுதேவா, ஹிமானி சிங் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது பிறந்தநாளன்று மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார் பிரபுதேவா. இதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.
Thangalaan: விபத்துக்கு பிறகு மீண்டும் பார்முக்கு திரும்பிய விக்ரம்: வெறித்தனமான ‘தங்கலான்’ லுக்.!
இந்நிலையில் பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதிகளுக்கு பெண் குழுந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே இவர்கள் ஏழுமலையானுக்கு நன்றி கூற கடந்த ஏப்ரல் மாதம் திருப்பதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபுதேவாவின் அப்பாவான நடன இயக்குனர் சுந்தரத்திற்கு பிறந்த மூன்று பேரும் மகன்கள் தான். அதே போல் பிரபுதேவா, ரமலத் தம்பதியினருக்கும் மூன்று பேரும் மகன்கள் தான். இந்நிலையில் சுந்தரம் மாஸ்டர் குடும்பத்திற்கு முதன்முதலாக பெண் வாரிசு பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதி மூலம் பிறந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Nayanthara: முதல் திருமண நாளில் நயன்தாராவை அழ வைத்த விக்கி: தீயாய் பரவும் வீடியோ.!