Unbearable: Referee Claims He Saw Wrestling Body Chiefs Horrifying Side | பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்: உறுதிபடுத்திய சர்வதேச மல்யுத்த நடுவர்!

புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகாரை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், லோக்சபா பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங், 66 மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து, புதுடில்லியில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 15 தேதிக்குள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தாக்கூர் உறுதியளித்தார். இதன்பேரில் , 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். பிரிஜ்பூஷன் மீதான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச மல்யுத்த நடுவர் ஜக்பீர் சிங், தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரிஜ் பூஷன் சிங், கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் பெண் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். கடந்த 2022 மார்ச் 22ல் லக்னோவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் ட்ரையல்சின் போது பெண் மல்யுத்த வீராங்கனையிடம் பிரிஜ் பூஷன் தகாத முறையில் நடந்து கொண்டார்.

புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது வீராங்கனை ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் அருகில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், அந்த வீராங்கனை அசவுகரியமான முகபாவனையை வெளிப்படுத்தினார். அனைவரின் கவனமும் அந்த வீராங்கனையின் மீது திரும்பியது. அந்த வீராங்கனையின் மீது, பிரிஜ்பூஷன் தகாத முறையில் கைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

2013ல் தாய்லாந்தில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது இறைச்சி சாப்பிடாத மைனர் பெண்களுக்கு இந்திய உணவுகளை அவர்களின் ஓட்டல் அறைகளுக்கே கொண்டு வர ஏற்பாடு செய்தார். அந்த ஓட்டலில் பிரிஜ்பூஷன் நண்பர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் அந்த சிறுமிகளை தகாத முறையில் தொட்டனர். இவை நிகழும்போது நான் அங்கிருந்தேன். அது ஒரு கொடுங்கனவு போல இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களை, டில்லி போலீசாரிடமும் ஜக்பீர் சிங் உறுதி செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.