திருச்சி மாவட்டம் முசிறி அருகே காதல் தம்பதி வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரம்பட்டி கிராமத்தில் சில இளைஞர்கள் வேறு சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்திருப்பதை காரணம் காட்டி கோயிலுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காதல் தம்பதி போலீசாரை அணுகிய நிலையில், கோவில் நிர்வாகத்தினர் திருவிழாவையே ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.