அமித் ஷா வந்தாச்சு… வரும் போது சலசலப்பிற்கு பஞ்சமில்லை. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சில நிமிடங்களில் பவர் கட். திடீர் பரபரப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாதுகாவலர்கள் உஷாராக அமித் ஷாவின் கார் மெதுவாக நகரத் தொடங்கியது. அவர் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அப்படியே கார் நின்றது.
அமித் ஷா வருகை
பவர் இல்லையென்றால் என்ன? எங்கள் கட்சி தொண்டர்களை எப்படி பார்க்கிறேன் பாருங்கள் என காரில் இருந்து இறங்கி வந்து கையைசைத்து கெத்து காட்டினார். பவர் கட் விஷயத்தை அப்படியே கடந்து செல்ல தயாரானார். ஆனால் தொண்டர்களால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. அமித் ஷா கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்க தயாரானார். இந்த சூழலில் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தவர்கள் நேற்று இரவு முதலே சந்திக்க தொடங்கினர்.
வேலூர் பொதுக்கூட்டம்
யாரெல்லாம் சந்திக்கவுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மொத்தம் 24 பேர். இன்று நண்பகல் வேலூர் புறப்பட்டு சென்று 9 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பேசவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அமித் ஷா புறப்படுவதற்கு முன்பாக மேற்குறிப்பிட்ட 24 பேரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அந்த 24 பேர்?
அனிதா பால்துரை – பத்மஸ்ரீ விருது வென்றவர்பிரீதா ரெட்டி – அப்போலோ மருத்துவமனைவிஜயகுமார் ரெட்டி – அப்போலோ மருத்துவமனைஏசி சண்முகம் – டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்நல்லி குப்புசாமி – நல்லிபாரிவேந்தர் பச்சமுத்து – எஸ்.ஆர்.எம்ரவி பச்சமுத்து – எஸ்.ஆர்.எம்
நவாப் முகமது அப்துல் அலி – ஆற்காடு நவாப்நவாப்சதா முகமது ஆசிப் அலி – ஆற்காடு நவாப்எம்.ஏ.எம்.ஆர் முத்தையா – செட்டிநாடு சிமெண்ட்என்.சீனிவாசன் – இந்தியா சிமெண்ட்ஸ்பி.எஸ்.ராஜன் – இந்தியா சிமெண்ட்ஸ்சிவராமகிருஷ்ணன் – முன்னாள் கிரிக்கெட் வீரர்பாஸ்கரன் – விளையாட்டு வீரர்
ஜிவி பிரகாஷ் – இசையமைப்பாளர்தேவானந்தன் – வின் டிவிஜெய் கிஷான் ஜவீர் – டேப்லெட்ஸ் இந்தியாசந்தான கிருஷ்ணன் – பி.கே.எஃப்ஆர்.கே.செல்வமணி – இயக்குநர் சங்க தலைவர்ஏ.ஆர்.ராஜசேகரன் – திரைப்பட இயக்குநர்
ஐசரி கணேஷ் – வேல்ஸ் பல்கலைக்கழகம்பிரமோத் ராஜன் – ஓ.எச்.எல் தாஜ் குழுமம்அபிராமி ராமநாதன் – திரைப்பட தயாரிப்பாளர்ஜி.எஸ்.கே வேலு – அப்போலோ டென்டல் அண்ட் டயாலசிஸ்