பெண்ணிடம் 6 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற டவுசர் கொள்ளையர்கள்..!

மதுரை அலங்காநல்லூர் அருகே பெண் ஒருவரிடம் 6 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பாப்பாகுடி வாசன் நகர், தினமணிநகர், உள்ளிட்ட புறநகர் விரிவாக்க பகுதிகளில் அரை கால் டவுசர், பட்டாகத்தி , முகமூடி அணிந்தவாறு கொள்ளையர்கள் வீடு வீடாக நோட்டமிடும் காட்சிகள் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளது.

கேமராக்களை பார்த்ததும் டவுசர் கொள்ளையர்கள் அவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.