
பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தனது 108வது படமான பகவந்த் கேசரி-யில் நடித்து வருகிறார். இன்று(ஜூன் 10) அவரது பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகி உள்ளது. வழக்கம்போல் அதிரடி ஆக்ஷனில் தூள் கிளப்பி உள்ளார் பாலகிருஷ்ணா. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து அவரது 109வது படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சர்தார் கபர் சிங், வால்டர் வீரைய்யா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாபி கொல்லி இயக்குகிறார் . இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இன்று பாலகிருஷ்ணா பிறந்தநாளை முன்னிட்டு பூஜை மற்றும் புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.