பதான்: பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு நிறைவை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சித்பூர் நகரில் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், நாடு மிகப்பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பேசுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை.
ராகுல் காந்தி வெளிநாடுகளில் சொந்த நாட்டைப் பற்றி விமர்சிக்கிறார். அவர் தனது முன்னோர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சொந்த நாட்டு அரசியல் பற்றி வெளிநாடுகளில் விவாதித்து விமர்சிப்பது, எந்த கட்சி தலைவருக்கும் அழகல்ல. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.