Samantha: வெளிநாட்டு கிளப்பில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய சமந்தா, நடிகர் வருண் தவான்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ராஜ் மற்றும் டி.கே. இயக்கி வரும் சிடாடல் வெப்தொடரில் உளவாளியாக நடித்து வருகிறார் சமந்தா. அதே தொடரில் மற்றொரு உளவாளியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Vijay SethuPathy செம்ம performer- Takkar Movie Heroine Dhivyansha Kaushik
சிடாடல் வெப்தொடரின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் வருண் தவானும், சமந்தாவும் செர்பியாவில் இருக்கும் பிரபல கிளப் ஒன்றுக்கு சென்றார்கள்.

அங்கு புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு வருண் தவானும், சமந்தாவும் டான்ஸ் ஆடினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா தான் குத்தாட்டம் போட்டிருந்தார். முன்னணி நடிகையாக இருந்து கொண்டு இப்படி குத்தாட்டம் போடுகிறாரே என விமர்சனம் எழுந்தது. ஆனால் பாடல் வெளியான பிறகு அனைவருக்கும் பிடித்துவிட்டது.

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை ஊ சொல்றியா மாமானு டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிடாடல் தொடருக்காக ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் சமந்தா. ப்ரியங்கா சோப்ரா நடித்திருக்கும் சிடாடல் ஹாலிவுட் வெப்தொடரின் இந்திய வெர்ஷன் தான் சமந்தா நடித்து வரும் சிடாடல்.

ப்ரியங்காவின் கதாபாத்திரத்தில் தான் சமந்தா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ப்ரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தில் அல்ல மாறாக அவருக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை சமந்தாவே தெரிவித்துள்ளார்.

வெப்தொடர் கதைப்படி உளவாளியான ப்ரியங்கா சோப்ராவின் அம்மாவும் ஒரு உளவாளி. அந்த அம்மா தான் சமந்தாவாம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

செர்பியாவில் ஷூட்டிங்கில் இருக்கும் சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட சிடாடல் குழு அங்கு வந்திருந்த இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிடாடல் குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜுக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தன்னால் நேரில் வர முடியாமல் போனதால் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சமந்தா.

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாகுந்தலம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சாகுந்தலம் தோல்வி அடைந்ததை நினைத்து வருத்தப்பட்டு வீட்டிலேயே முடங்காமல் சிடாடல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

Vairamuthu: வைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது: பாடகி புவனா சேஷன்

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து குணமடைந்து வரும் சமந்தா, சிடாடல் வெப்தொடரில் டூப் போட மறுத்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் நானே தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்து வருகிறார்.

அப்படி நடிக்கும்போது அவருக்கு காயங்களும் ஏற்படுகிறது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங்கிற்கு இடையே ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்து வருகிறார்.

தான் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமந்தா. அதில் அவரின் ஆப்ஸை பார்த்த ரசிகர்கள் மிரண்டு தான் போனார்கள். சமந்தா தன் ஆப்ஸை காட்டி ரசிகர்களை மிரள வைப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.