ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர்.
கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும் விரும்புவார்கள்.
ஆனால், கடற்கரையில் நாம் பார்க்கவே முடியாத பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கும். இதற்காகவே கடற்கரை பக்கம் போனாலே பலரும் முகம் சுழிக்கிறார்கள். நம்ம ஊர் பீச்சிலேயே இந்த நிலை என்றால் வெளிநாடுகளில் தனியாகச் சொல்ல வேண்டுமா..
கடற்கரை: நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பீச்சில் சில ஜோடிகள் அங்கே அனைவருக்கும் முன் அத்துமீறுவதையும் வேடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி அடிக்கடி பொது இடத்தில் இளசுகள் நெருக்கமாக இருக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்தே வந்து இருக்கிறது. இதனால் அங்கு வரும் மக்கள் நொந்து போகிறார்களாம்.
தெற்கு நெதர்லாந்தில் உள்ள வீரே என்ற நகரில் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இது எந்தளவுக்கு மோசமாகிவிட்டது என்றால் அந்த நகர நிர்வாகம் பீச்சில் உடலுறவு வைப்பதைத் தவிருங்கள் என்று பிரசாரம் செய்யும் அளவுக்கு மோசமாகிவிட்டது. மேலும், அங்குள்ள கடற்கரைகளில் இது குறித்த எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. பீச்களில் உடலுறவு தடை செய்யப்பட்டுள்ளதாக போர்டுகளை வைத்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு: மேலும் கடற்கரைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நகர நிர்வாகம், நீர் வாரியம் ஆகியவற்றிடம் அடுக்கடுக்காக குவிந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில ஜோடிகள் முன்கூட்டியே பிளான் செய்து வந்த கூட பீச்சில் நிர்வாணமாக உடலுறவு வைத்துக் கொள்கிறார்களாம். அங்குள்ள பீச்களிலும் அருகே இருக்கும் சிறு குன்றுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே இது குறித்து அந்நகர மேயர் ஃப்ரெடெரிக் ஷோவெனார் கூறுகையில், “இந்த குன்றுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவை. இதை நாம் பாதுகாக்க வேண்டும். இருப்பினும், விடுமுறைக்கு வருவோர் இயற்கை சூழலைச் சேதப்படுத்தும் நோக்கில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடும் நடவடிக்கை: இதுவரை பொது வெளியில் உடலுறவு வைப்போரிடம் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பீச்சில் நிர்வாணமாக சன் பாத் எனப்படும் சூரிய குளியல் எடுக்க வரும் அனைவரும் இதுபோல உடலுறவு வைத்துக் கொள்வதில்லையாம். இது குறித்து நிர்வாணமாக சன் பாத் எடுப்பதை ஆதரிக்கும் NFN Open en Bloot அமைப்பைச் சேர்ந்தவர் கூறுகையில், “ஆடையில்லாமல் சூரிய குளியல் எடுக்க வரும் அனைவரும் இதைச் செய்வதில்லை. உண்மையில், அவர்களும் இது தொல்லை தரும் நடவடிக்கையாகவே கருதுகிறார்கள்.
நிர்வாணமாகக் குளிப்பதும் பீச்சில் இருப்பதும் சுதந்திர உணர்வைத் தருகிறது. மேலும், இது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பொது வெளியில் உடலுறவு கொள்வதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.
எதிர்ப்பு: இது குறித்து நெதர்லாந்து பாலியல் நிபுணர் யூரி ஓல்ரிச்ஸ் கூறுகையில், “இப்போது உலகின் பல நாடுகளில் பழமைவாத இயக்கத்தின் காரணமாக, உடலுறவு மற்றும் நிர்வாணம் குறித்து வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. அப்படிப் பேச முயல்வோரை ஒடுக்குவது இப்போது ஒரு டிரெண்டாகிவிட்டது. இதனால் தான் இப்போது பொது வெளியில் உடலுறவு கொள்ளத் தடை விதித்துள்ளனர். இதில் யாருக்கு என்ன பிரச்சினை எனப் புரியவில்லை” என்றார்.