வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஓவல்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் பைனலில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லண்டனில் ஓவலில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469, இந்தியா 296 ரன் எடுத்தன. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 270/8 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணிக்கு 444 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (44), ரகானே (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வேகப்பந்துவீச்சாளர் போலந்து மீண்டும் நெருக்கடி தந்தார். இவரது ஒரே ஓவரில் கோஹ்லி (49), ஜடேஜா (0) ஆட்டமிழந்தனர். ஆறுதல் தந்த ரகானே 46 ரன்னில் அவுட்டானார். லியான் ‘சுழலில்’ ஷர்துல் டக் அவுட்டானார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்தியா 2வது இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக லியான் 4 விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதன் மூலம், ஒரு நாள், ‘டி-20’, டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டியிலும் உலக கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement