சென்னை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் உருவாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஸ்டாலின், ”குழந்தைப் பருவம், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். […]
