சென்னை : நடிகை எமி ஜாக்சன் வெயிலுக்கு டிரஸ் போடவே பிடிக்கவில்லை என கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன். விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
காதலுடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார்.
நடிகை எமி ஜாக்சன் : ஹாலிவுட் மாடலான எமி ஜாக்சன் ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்திருந்தார்.
திருமணத்திற்கு முன்பே தாயானார் : தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்த போதே, ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருவரும், லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதையடுத்து, திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
காதலனை பிரிந்தார் : இதையடுத்து, காதலுனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுபிரிந்தார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜின் புகைப்படங்களையும் அவரின் பெயரையும் நீக்கினார். இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எமி, பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிகினியில் : இணையத்தில் எப்போதும் படுபிஸியாக இருக்கும் எமி ஜாக்சன், கடற்கரையில் வெள்ளை நிற பிகினியில் கவர்ச்சி விருந்து அளிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
அச்சம் என்பது இல்லையே : மறுபுறம் தமிழ் சினிமாவில் நடிகை எமி ஜாக்சன் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார் எமி. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.