ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில் துவக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாட்டுச் சாணத்தில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் தில்ஹார் என்ற பகுதியில் உள்ள ராஜன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா கங்வார், 42; அந்தப் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், 50க்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறார். அவற்றின் சாணத்தை மூலப்பொருட்களாக பயன்படுத்தி, ஊதுவத்தி, சுவர் தோரணம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து வருகிறார்.
இது குறித்து, ஆசிரியை பூஜா கங்வார் கூறியதாவது:
கடந்த 2017 முதல், மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி ஊதுவத்திகள், சுவர் தோரணங்கள், கோப்பைகள், பெயர் பலகைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறேன். என்னுடன், 12க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இது குறித்து என்னிடம் கற்று தெரிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement