இந்தியாவில் கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்துவது சாதாரண ஒன்றாகிவிட்டது. மக்களை கவர்வதற்காகவே நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன், சந்தையில் பல வகையான ஏசிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. சில சமயங்களில் ஏர் கண்டிஷனர்கள் நமது பட்ஜெட்டுக்கு மீறியதாக இருக்கும், அதிலும் விண்டோ ஏர் கண்டிஷனர்களை விடவும் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களின் விலை அதிகமாக இருந்து வருகிறது. பட்ஜெட் விலைக்குள் ஏசி வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, ஸ்ப்ளிட் ஏசி சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்த நிலையில், தற்போது பட்ஜெட் விலைக்குள் ஸ்ப்ளிட் ஏசி கிடைக்கிறது. மலிவான விலையில் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனர்கள் கிடைக்கும் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யமானதாக இருக்கும். இப்போது ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனரை மலிவு விலையில் எங்கு வாங்கலாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம். மலிவு விலையிலான ஸ்ப்ளிட் ஏசி-க்கள் அமேசான் பேஸிக்ஸில் கிடைக்கிறது. அமேசான் பேஸிக்ஸின் 3 ஸ்டார் மதிப்பீடு கொண்ட 1 டன் ஸ்பிளிட் ஏசி தான் சந்தையில் மலிவான ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் ஆகும். இந்த ஏசி உங்களுக்கு வெள்ளை, தாமிரம் மற்றும் ஆன்டி கரோசின் பூச்சுடன் வருகிறது. இந்த ஏர் கண்டிஷனரை வாங்குவது விண்டோ ஏர் கண்டிஷனரை வாங்குவது போன்றது, எனவே இதை வாங்குவது வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டில் எந்தவொரு சுமையையும் ஏற்படுத்தாது.
இந்த ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனரின் விலை உண்மையில் ரூ 50,000 ஆகும், ஆனால் அமேசான் பேஸிக்ஸ் உங்களுக்கு 45% பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த பெரும் தள்ளுபடியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இந்த ஸ்ப்ளிட் ஏசியை வெறும் ரூ 27,490க்கு வாங்கி கொள்ளலாம். இதுவரையில் வாடிக்கையாளர்கள் இந்த தொகையில் விண்டோ ஏர் கண்டிஷனர்களை மட்டுமே வாங்கி வந்த நிலையில், இப்போது இந்த மலிவான விலையில் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனர்களையும் வாங்கமுடியும். இந்த ஸ்பிளிட் ஏசி 1 டன் திறன் கொண்டதாக வருகிறது, எனவே இது உங்கள் அறையை சில நிமிடங்களில் குளிர்விக்கும். இந்த ஏர் கண்டிஷனரில் இன்வெர்ட்டர் அல்லாத கம்ப்ரசர் பொருத்தப்பட்டுள்ளது, இதற்கு 3 ஸ்டார் BEE தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது, இதனால் அதிக சக்தியை சேமிக்க முடியும். இது 3.56 சதவீதம் கூடுதல் மின்சாரத்தை முழுமையாக சேமிக்கும் திறன் கொண்டது. இந்த ஏர் கண்டிஷனர் ஒரு பெரிய பகுதியில் காற்று ஓட்டத்தை வழங்குகிறது, இதனால் தூரத்தில் அமர்ந்திருப்பவர்கள் கூட குளிர்ச்சியை அனுபவர்களாம். இந்த ஏர் கண்டிஷனர் 100% செப்பு மின்தேக்கியைப் பெறுகிறது, இது குளிர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது.
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 ஏர் கண்டிஷனர்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்கியது. அமேசானின் இந்த சலுகை கால விற்பனையின் பொருட்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு பிராண்டுகளின் டாப்-ஆஃப்-லைன் ஏசி யூனிட்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கியது. கோடைகால பொனான்சா ரிவார்டுகள், ஈஸி ரிட்டர்ன்ஸ், அருமையான தள்ளுபடிகள் மற்றும் பேங்க் கார்டுகளில் நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற கூடுதல் சலுகைகளும் வாடிக்கைகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.