திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரிலும் போகலாம்… இந்த சேவை தெரியுமா?

திருப்பதி கோவிலுக்குகான ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியியுள்ளது பிளேட் இந்தியா நிறுவனம்.

திருப்பதிதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. இதேபோல் திருப்பதிக்கு ரயில் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து கீழ் திருப்பதி வரை போக்குவரத்து சேவை வழங்கப்பட்டாலும், அங்கிருந்து திருமலைக்கு ஆந்திர அரசின் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன.
​ அது இல்லை என்றால்.. அப்படி ஒரு உறவே வேண்டாம்… திருமணம் குறித்து தடாலடியாக பேசிய அஞ்சலி!​லட்சக்கணக்கான பக்தர்கள்மேலும் ஷேர் ஆட்டோக்களும் உள்ளன. பக்தர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் வந்தும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாத யாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் திரமலையில் தரிசனம் செய்து வருகின்றனர். கீழ் திருப்பதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி பாதை வழியாக நடந்து சென்றே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
​ பிபர்ஜாய் புயலுக்கு கண்ணு வந்துருச்சு… தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்!​ஹெலிகாப்டர் சேவைதிருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறதே தவிர குறையவில்லை. இந்நிலையில் திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஃபிளை பிளேட் இந்தியா (Fly Blade India) நிறுவனம் வான் வழி சேவையை தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் திருப்பதிக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது.
​ 2வது திருமணத்திற்கு தடையாய் இருந்த 6 வயது மகள்… கோடரியால் வெட்டி கொன்ற கொடூர தந்தை!​ஹெலிகாப்டர் சேவை நேரம்இப்போது முதல் கட்டமாக பெங்களூரில் இருந்து திருப்பதி சேவையையே தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9:30 மணிக்கு, FlyBladeIndia நிறுவனம் பெங்களூரு HAL விமான நிலையத்திலிருந்து இந்த சேவையை தொடங்கும், அதே நாளில் மாலை 4 மணிக்கு திருப்பதியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பும். நாடு முழுவதிலும் இருந்து திருப்பதி திருமலைக்கு பக்தர்கள் வருவதால் ஏற்கனவே திருப்பதியில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.

​ கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷ்தான் என் கணவர்… மிரள வைத்த சீரியல் நடிகை!​கட்டணம் எவ்வளவு?இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சேவைக்கான கட்டணம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த சேவையின் மூலம் ஒரே நாளில் சென்று திரும்பி விடலாம். மேலும் இதன்மூலம் ஒரே நேரத்தில் 5 பேர் வரை ஹெலிகாப்டரில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம் சில நிமிடங்களிலேயே பெங்களூரில் இருந்து திருப்பதியை சென்றடையலாம்.
​ பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? அண்ணாமலை கடும் கண்டனம்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.