கடந்த ஆண்டு இறுதியல் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஹூண்டாய் i20 கார் முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. முன்புறத்தில் மற்றும் பின்புறத்திலும் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருக்கலாம்.
இன்டிரியரில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டும் பெற்று டேஸ்கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கலாம்.
2023 Hyundai i20
சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலை போன்ற முன்புற பம்பர், கிரில் அமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கலாம். அடுத்தப்படியாக, புதிய ஆலாய் வீல் கொண்டிருக்குகின்றது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லை. பின்புறத்தில் பம்பர், எல்இடி டெயில் லைட் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
இன்டிரியரில் , புதிய மேம்பட்ட 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை கொண்டிருக்கும். ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை இருக்கலாம். புதிய அம்சங்களுடன் மிக காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட் விளக்குகள் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, i20 மாடலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா என ஆறு ஏர்பேக்குகள் பெற்றிருக்கும்.
விற்பனையில் கிடைக்கின்ற டாடா அல்ட்ராஸ், மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா உள்ளிட்ட மாடல்களை ஹூண்டாய் ஐ20 எதிர்கொள்ள உள்ளது.