Twitter நிறுவனத்திற்கு எதிராக இறங்கிய மெட்டா! என்ன செய்வார் எலன் மஸ்க்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Meta நிறுவனம் உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான போட்டியாளர்களை சந்தித்துவருகிறது.

குறிப்பாக ட்விட்டர் உள்ள காரணத்தால் Facebook பயன்படுத்தும் பிரபலங்களின் எண்ணிக்கையை விட ட்விட்டர் பயன்படுத்தும் பிரபலங்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். Facebook போல இல்லாமல் ட்விட்டர் வேறு விதமாக இயங்கும் ஒரு செயலி ஆகும்.

இதைத்தவிர கடந்த சில ஆண்டுகளாக TikTok, Snapchat, Discord போன்ற சமூகவலைத்தளங்களின் வருகை Meta நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் Reels, Stories, Communities போன்ற வசதிகளை Meta நிறுவனம் வழங்கவேண்டிய கட்டாயத்தில் அதன் பயனர்களுக்கு தற்போது வழங்குகிறது.

Disney+Hotstar மூலம் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காணலாம்! ஜியோவை சமாளிக்க வேறு வழியில்லை!

Meta நிறுவனம் ஏற்கனவே Facebook, Instagram, Whatsapp போன்ற முக்கிய சமூகவலைத்தளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் இப்போது Twitter நிறுவனத்திற்கு நேரடி போட்டியாளராக ஒரு சமூகவலைத்தளத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இது பேசப்பட்டு வந்த நிலையில் விரைவில் அது வெளிவர இருப்பதாகவும் இதை ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவரான லிண்டா ‘GameON’ என்று பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

இந்த புதிய செயலி facebook போல தனிப்பட்ட சமூகவலைத்தலமாகவும் இதற்கென தனியாக ட்விட்டர் போன்ற UI இருக்கும் என்றும் தெரிகிறது. இதற்கு ‘Project 92’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த நமது Facebook மற்றும் Insta ID உதவியாக இருக்கும்.

இதிலும் ட்விட்டர் உள்ளே இருக்கும் வசதிகளான Like, Comment, Re-Share, Thread என பல வசதிகள் இருக்கும். இதில் பங்கெடுக்க உலகின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் ஓபரா ஆகியவர்களிடம் இதில் இணையும்படி அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எலன் மஸ்க் மீது தாக்கு

இந்த புதிய சமூகவலைத்தளம் பற்றி பேசிய Meta நிறுவன முக்கிய அதிகாரி கிறிஸ் கோக்ஸ் “மக்கள், படைப்பாளிகள் பலர் தங்களிடம் நம்பகத்தன்மையான, உண்மையான, நல்லவர்களால் நடத்தப்படும் சமூகவலைத்தளம் தேவை என்று கோரிக்கை வைத்ததால் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக” கூறியுள்ளார்.

Apple VR கருவியை கலாய்த்து தள்ளிய எலன் மஸ்க்! 20 டாலர் காளான்களுக்கு நிகரா?

எலன் மஸ்க் ட்விட்டர் விஷயத்தில் ஊழியர்கள், பயனர்கள் மீது கடுமையாக நடந்துகொண்டது பயனர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் Google Cloud Subscription தொகையை ட்விட்டர் செலுத்தாததால் பயனர்களின் விவரங்கள் இணையத்தில் கசியும் அபாயம் உள்ளது.

இதில் Meta நிறுவனத்திற்கும் பயனர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இல்லை. அந்த நிறுவனமும் பயனர்களின் விவரங்களை வெளியில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இருந்தாலும் புதிய Project 92 ஆப் எப்படி இருக்கும் என்பது பற்றி பயனர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.