ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்றும் நாள் கணக்கில் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
அச்சச்சோ… பாபா வங்கா சொன்னது உண்மையாக போகுதா?
குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாத சேவை மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் திருப்பாவாடை சேவையிலும் திருப்பதி தேவஸ்தானம் மாற்றம் செய்தது.
இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோடை விடுமுறை நிறைவை முன்னிட்டு திருப்பதியில் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.
தாமிரபரணி ஆற்றுநீர் குடிக்கும் தகுதியை இழக்க காரணம் இதுதான்… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும். நேற்று மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். நேற்றைய ஒரு நாள் உண்டியல் காணிக்கை மட்டும் 4.2 கோடி ரூபாய் ஆகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது இல்லை என்றால்.. அப்படி ஒரு உறவே வேண்டாம்… திருமணம் குறித்து தடாலடியாக பேசிய அஞ்சலி!
மேலும் 109.99 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. கடந்த மே மாதத்தில் ஏழுமலையான் கோவில் 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரிலும் போகலாம்… இந்த சேவை தெரியுமா?