சென்னை: திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே தனி சிறப்பு உண்டு. இசையோடு மட்டுமல்லாமல், அவருடைய குரலுக்கும் நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். அன்று முதல் இன்று வரை மவுஸு என்பதே குறையாத ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியாகவே அவருடைய மகன் மற்றும் மகள் திரையுலகில் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் ஒரு பாடகராக வலம் வருகிறார். இந்த நிலையில், பாடகியும் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா ரஹ்மான் இப்போது இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். […]